ஒரே வாரத்தில் உங்கள் தலைமுடி பிரச்சினை அனைத்தையும் மாயமாக்கும் ஒரு அதிசய பொருள்!!!

Author: Hemalatha Ramkumar
24 November 2021, 12:08 pm
Quick Share

நீளமான, ரம்மியமான மற்றும் வலுவான கூந்தலை யார் தான் வேண்டாம் என்பார்கள். ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான முடியைப் பெறுவது நம் அனைவரது கனவு என்றே சொல்லலாம். ஆனால், இதனை எளிதில் சாதிக்க முடியாது. மாசுபாடு, சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களின் வெளிப்பாடு, இரசாயனக் கலவை, வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மற்றும் சரியான கவனிப்பு இல்லாமை போன்ற காரணிகள் பொடுகு மற்றும் ஆரோக்கியமற்ற உச்சந்தல் போன்ற பிரச்சினைகளை உங்களுக்கு ஏற்படுத்தலாம். இந்த சிக்கல்கள் இறுதியில் முடி உதிர்வதற்கும், முடி வளர்ச்சி குன்றியதற்கும் வழிவகுக்கும். இருப்பினும், கவலைப்பட வேண்டாம், உங்களுக்கான தீர்வு இங்கே உள்ளது.

ஆப்பிள் சைடர் வினிகர் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பொருளாகும். இது உங்கள் முடி வளர்ச்சி பிரச்சனைக்கு மிகவும் பயனுள்ள தீர்வாகும். உலகெங்கிலும் உள்ள பல பெண்கள் இதனை முயற்சித்து பலனடைந்து உள்ளனர்.

எனவே, உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்க ஆப்பிள் சைடர் வினிகரைப் பயன்படுத்த மிகவும் எளிமையான மற்றும் மிகவும் பயனுள்ள மூன்று வழிகள் இங்கே உள்ளன.

முடி வளர்ச்சிக்கு ஆப்பிள் சைடர் வினிகரை எவ்வாறு பயன்படுத்துவது?
◆ஆப்பிள் சைடர் வினிகர் கொண்டு தலைமுடியை அலசல். ஆப்பிள் சைடர் வினிகரை பயன்படுத்த இதைவிட சிறந்த வழி இருக்க முடியாது. இது உங்கள் மயிர்க்கால்களுக்குத் தேவையான ஊக்கத்தை அளிக்க வேண்டும். 4 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை 2 கப் தண்ணீரில் நீர்த்து போக செய்யவும். நீங்கள் ஷாம்பு செய்து முடித்த பிறகு, இந்த ஆப்பிள் சைடர் வினிகர் கரைசலை உங்கள் உச்சந்தலை மற்றும் தலை முடி முழுவதும் பயன்படுத்தி சுமார் ஒரு நிமிடம் அப்படியே விடவும். பின்னர் அலசி கொள்ளவும்.

ஆப்பிள் சைடர் வினிகர் ஷாம்பு:
இந்த வைத்தியம் மிகவும் எளிமையானதாக இருக்கும். உங்கள் வழக்கமான ஷாம்பூவுடன் ஆப்பிள் சைடர் வினிகரை சேர்ப்பது உங்கள் உச்சந்தலையை ஆழமாக சுத்தப்படுத்துகிறது மற்றும் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூ உடன் ½ டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை கலக்கவும். ஆப்பிள் சைடர் வினிகர் கலந்த ஷாம்பூவை உங்கள் உச்சந்தலை மற்றும் தலைமுடி முழுவதும் தடவவும். 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்னர் அதை நன்கு அலசவும்.

ஆப்பிள் சைடர் வினிகர், வாழைப்பழம் மற்றும் தேயிலை மர எண்ணெய்: வாழைப்பழம் உங்கள் தலைமுடிக்கு கண்டிஷனராக செயல்படுகிறது. உங்கள் தலைமுடியை மேலும் சேதமடையாமல் பாதுகாக்கிறது. வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், இயற்கை எண்ணெய் மற்றும் வைட்டமின்கள் தோல் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்த உதவுகிறது. இதனால் முடி உடைவதை தடுக்கிறது. தேயிலை மர எண்ணெயில் வலுவான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை உங்கள் உச்சந்தலையில் உள்ள பாக்டீரியா மற்றும் அதிகப்படியான உருவாக்கத்தை நீக்கி, முடி வளர்ச்சியை மேம்படுத்த அதை முழுமையாக சுத்தப்படுத்துகிறது. ஒரு பாத்திரத்தில் ஒரு பழுத்த வாழைப்பழத்தை கூழாக மசிக்கவும். அதில் 1/2 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் 4-5 தேயிலை மர எண்ணெய் சேர்க்கவும். பொருட்கள் அனைத்தையும் நன்றாக கலக்கவும். இந்த பேஸ்ட்டை உங்கள் உச்சந்தலையில் தடவவும். சுமார் 30 நிமிடங்கள் அதை விட்டு விடுங்கள். பின்னர் வெதுவெதுப்பான நீர் மற்றும் லேசான ஷாம்பூவைப் பயன்படுத்தி முடியை நன்கு அலசவும்.

Views: - 193

0

0

Leave a Reply