முகத்தில் தனி கலை தாண்டவமாட தேனை இப்படி யூஸ் பண்ணுங்க!!!

18 January 2021, 3:55 pm
Quick Share

தேன் நமது சருமத்திற்கு பல நன்மைகளை தரக்கூடியது என்று நம் அனைவருக்கும் தெரியும். தேனில் ஆன்டி மைக்ரோபியல், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் காயத்தை ஆற்றும் தன்மை உள்ளது. இதன் காரணமாக அது வறண்ட சருமம், முகப்பரு, மந்தமான தோற்றம் போன்ற சரும பிரச்சினைகளை போக்குகிறது. சருமத்திற்கு தேனை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி இப்போது பார்க்கலாம். 

1. தேன் மற்றும் எலுமிச்சை சாறு:

எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு தேன் நல்ல தீர்வு தருகிறது. அதிகப்படியான எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தி முகப்பருக்கள் வராமல் பார்த்து கொள்கிறது. இரண்டு தேக்கரண்டி தேனோடு எலுமிச்சை சாற்றை கலந்து நன்றாக கலந்து கொள்ளவும். முகத்தை சுத்தம் செய்து விட்டு பிறகு பேஸ்டை முகத்தில் தடவவும். இருபது நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இதனை வாரத்தில் ஒரு முறை செய்து வந்தாலே நல்ல பலன் கிடைக்கும். 

2. தேன் மற்றும் இலவங்கப்பட்டை:

முகப்பருக்கள் மற்றும் அதன் வடுக்களை போக்குவதில் இலவங்கப்பட்டை பொடி பெரும் பங்கு வகிக்கிறது. ஒரு தேக்கரண்டி தேனில் மூன்று சிட்டிகை இலவங்கப்பட்டை தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதனை முகம் முழுவதும் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி கொள்ளவும். வாரம் இரண்டு முறை இதனை செய்து வந்தால் வடுக்கள் விரைவில் மறைந்து முகம் அழகாகும். 

3. தேன் மற்றும் தக்காளி:

தக்காளியில் லைக்கோபீன் என்னும் ஆக்ஸிஜனேற்றி உள்ளது. தக்காளிக்கு அதன் நிறத்தை கொடுப்பது இது தான். சருமத்தில் உள்ள செல்களின் சேதத்தை தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. மேலும் சரும ஆரோக்கியத்திற்கும் இது உறுதுணையாக இருக்கும். நன்றாக மசித்த தக்காளியோடு தேனை கலந்து கொள்ளவும். கட்டிகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். இதனை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 15 உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவி கொள்ளலாம். இதனை வாரம் இருமுறை செய்து வரவும்.

4. தேன் மற்றும் வாழைப்பழம்:

சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து தேவையற்ற கரும்புள்ளிகளை போக்கும் தன்மை வாழைப்பழம் மற்றும் தேன் கலவைக்கு உண்டு. வாழைப்பழத்தை நன்றாக மசித்து இதனோடு தேனை கலந்து கொள்ளவும். இந்த பேஸ்டை முகத்தில் தடவி இருபது நிமிடங்கள் காத்திருந்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த செயல்முறையை வாரம் இரண்டு முறை செய்து வாருங்கள். 

5. தேன் மற்றும் மஞ்சள் தூள்:

பல பெண்களின் கனவு தெளிவான சருமம் தான். எந்த விதமான சரும பிரச்சினைகளும் வராமல் இருக்க மஞ்சள் தூள் மற்றும் தேன் ஆகிய இரண்டையும் சம அளவு கலந்து கொள்ளவும். இதனோடு மூன்று தேக்கரண்டி தயிர் சேர்க்கவும். முகம் மற்றும் கழுத்து முழுவதிலும் இந்த கலவையை பூசவும். இருபது நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். இதனை வாரத்தில் இரண்டு நாட்கள் செய்து வரவும்.

Views: - 13

0

0