ஆரவ்வின் திருமணதிற்கு ஏன் ஓவியா வரவில்லை ? காரணத்தை வெளியிட்ட சுஜா !
8 September 2020, 2:00 pmவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்சசியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார் ஆரவ் . இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓவியாவுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கியதன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமும் ஆனார்.
அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் மூலம் பிரபலமான ஆரவ் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்ற படத்தில் நடித்திருந்தார்.
தற்போது ஓவியாவை கைவிட்டுட்டு ஜோஷ்வா இமை போல் காக்க படத்தில் கதாநாயகி ஆக நடிக்கும் ராஹே என்னும் நடிகையை திருமணம் செய்துள்ளார். இவரின் கல்யாணத்திற்கு சினேகன், ஆர்த்தி, காயத்ரி ரகுராம், பிந்துமாதவி, சுஜா, ஹரிஷ் கல்யாண் என முக்கால்வாசி பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இதை பார்த்த ஓவியா ஆர்மியை சேர்ந்த ரசிகை “ஓவியா எங்க அக்கா என சுஜாவிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.
உடனே, அதற்கு அவர் அவருடைய வீட்டில் இருப்பாங்க என கூறியிருந்தார். இவ்வாறு இவர் கூறிய பதிலானது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
0
0