டிவிட்டருக்கு டாட்டா காட்டிய சித்தார்த்…. ஒரேயொரு டுவிட்… மொத்த அக்கவுண்ட்டும் குளோஸ்!!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2021, 6:50 pm
Siddharth Twit Close -Updatenews360
Quick Share

டிவிட்டரில் சர்ச்சை பதிவுகளை பதிவிட்ட நடிகர் சித்தார்த்த டிவிட்டரில் இருந்து வெளியேறினார்.

நீட் தேர்வுக்கு எதிராக, குரல் கொடுத்த நடிகர்களில் நடிகர் சித்தார்த்தும் ஒருவர். அதுவும் சித்தார்த் எல்லோரையும் முந்திக்கொண்டு டுவிட்டர் பதிவுகள் மூலம் அனல் பறக்கும் கேள்விகளை எழுப்புவார்.

அவருடைய அந்த அதிரடி, அடுத்த நிமிடமே சமூக ஊடகங்களில் வைரலாகி விடும். சில தனியார் செய்தி சேனல்களும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பிரளயத்தையே ஏற்படுத்தும்.

கடந்த ஏப்ரல் 28-ம் தேதி நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பதிவில் “ஒழுக்கமான மனிதராக இருந்தாலும் அல்லது துறவியாக இருந்தாலும் அல்லது தலைவராக இருந்தாலும், யாராக இருந்தாலும் பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி ஒரு அறை விழும்!” என ட்வீட் போட்டார்.

உத்தரபிரதேச மாநில மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதாக பொய் சொன்னால் சட்ட ரீதியிலான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்ததை குறிப்பிட்டு அவர் இப்படி ட்வீட் செய்து இருந்தார்.

அடுத்த 2 நாட்களில் அதாவது, மே 1-ம் தேதி “தடுப்பூசி எங்கேடா?” என்று பதிவிட்டு பாஜகவை கடுப்பேற்றினார். அது மறைமுகமாக பிரதமர் மோடியை தாக்குவதாக இருந்ததால் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

அதுதான் தற்போது சித்தார்த்துக்கு, பெரும் தலைவலியாக மாறியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்த அவர் தற்போது பெட்டிப் பாம்பாக ஆகி விட்டார் என்கிறார்கள்.

உத்தரபிரதேச முதலமைச்சர் பொய் சொன்னால் அறைவேன் என்று அவர் சில மாதங்களுக்கு முன்பு, போட்ட ட்வீட்டை வைத்து ஒருவர் சித்தார்த்தின் ட்விட்டர் பக்கத்தில் அண்மையில் ஒரு கேள்வியை எழுப்பினார்.

அதில், “நீட் தேர்வை முதல் சட்டப் பேரவை கூட்டத்திலேயே ரத்து செய்வோம் – தேர்தல் வாக்குறுதி. இன்று நீட் நடக்கிறது. பொய் சொன்னால் முதல்வராக இருந்தாலும் கன்னத்தில் அறைவேன் –ஐயா சித்தார்த் என்ன பண்ணப் போறீங்க?” என்று கிடுக்குப்பிடி போட்டிருந்தார்.

சித்தார்த் வெளியிட்டுள்ள பதிவில், “மூதேவி. கோபமோ சந்தேகமோ வந்தா, துப்பிருந்தா போய் நீ கேளு. இல்ல உங்கப்பன கேளு. நான் என் வேலையைதாண்டா பாக்கறன். பொறுக்கி. இதுவே வேலையா போச்சு. டுவிட்டரை டாய்லட்டாக்கி வச்சிருக்காங்க. வேற எங்கே மலரும். சாக்கடையில்தான் மலரும். எழவு. இந்தில சொல்லட்டா?” என்று கோபமாக வெடித்துள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த் தனது டிவிட்டர் கணக்கை அழித்துள்ளார். டிவிட்டரை டாய்லெட் என கூறியதால் நடிகர் சித்தார்த் வெளியேறினாரா அல்லது தனது யெரை தானே களங்கப்படுத்தியதால் வெளியேறினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Views: - 429

17

4