“ஜாக்கிரதையா இருங்க சுந்தர்.சி..” இந்த வயதிலும் குஷ்பு எப்படி மிரட்டுறாருன்னு பாருங்க ..!
Author: Mari18 January 2022, 1:29 pm
குஷ்பு தமிழ் சினிமாவில் நடிகை, படத்தயாரிப்பு, அரசியல் என்று அனைத்துத் துறைகளிலும் தன் முத்திரையை பதித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் ரசிகர்கள் அவருக்கு கோவில் கட்டும் அளவுக்கு சென்றும் உள்ளனர். மேலும் ரஜினி, கமல், பிரபு போன்ற முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரபுவுடன் சின்னத்தம்பி, ரஜினியுடன் அண்ணாமலை போன்ற திரைப்படங்கள் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
சமீபத்தில், ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது உடல் பருமனாக இருப்பவர்களை கொரோனா தாக்குவது அதிகரித்துள்ளதால், எடையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இருந்தார்.
அவரது முயற்சிக்கு பின்னர் தன் உடல் எடையை முற்றிலும் குறைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி போட்டோக்களை ஷேர் செய்து வரும் குஷ்பு தற்போது ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
28
6