ஐய்யனார் கெட்டப்பில் மிரட்டும் பாலய்யா… ஆந்திரா மட்டுமல்ல ஆஸ்திரேலியாவிலும் ‘அகண்டா’ போட்ட ரவுசு..!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
4 December 2021, 6:22 pm
Akhanda 1- updatenews360
Quick Share

பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவின் அகண்டா படத்தை ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வரும் நிலையில், ஆஸ்திரேலியாவில் ரசிகர்களுக்காக திரையரங்கு நிர்வாகம் செய்த செயல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லெஜ்ண்ட், சிம்ஹா ஆகிய இரு பிளாக்பஸ்டர் திரைப்படங்களுக்கு பிறகு நடிகர் பாலகிருஷ்ணா – இயக்குநர் பொயப்படி ஸ்ரீனு கூட்டணி இணைந்த 3வது படம் அகண்டா. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே, பாலகிருஷ்ணாவின் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இதனிடையே, கொரோனா ஊரடங்கிற்கு பிறகு, அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, உலக முழுவதும் அகண்டா திரைப்படம் வெளியானது.

அகண்டாவின் திரைப்படத்தை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், படத்தில் அவர் வரும் ஐய்யனார் போன்ற கெட்அப்புகளை போட்டு வந்து திரையரங்குகளில் பிற ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி வருகின்றனர். மேலும், பாலகிருஷ்ணாவின் தீவிர ரசிகர்கள், படம் குறித்து ரிவ்யூ கொடுக்கும் போதே, செய்தியாளர்கள் மிரண்டு போகும் அளவிற்கு ரியாக்ஷன்களை கொடுக்கின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Courtest : S Tv

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் திரையரங்கு ஒன்றில் வெளியான அகண்டா திரைப்படத்தின் போது, அதனை பார்த்துக் கொண்டிருந்த பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர். மேலும், எல்லை மீறிய கொண்டாட்டத்திற்கு அவர் சென்றதாகவும், அப்போது, படத்தை பாதியில் நிறுத்தி, ரசிகர்கள் தங்களின் உற்சாகத்தை கட்டுக்குள் வைக்குமாறு திரையரங்கு நிர்வாகம் கேட்டுக் கொண்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைராகி வருகிறது.

Courtesy : Tolllywoodboxoffice.IN

இதேபோல, அமெரிக்காவிலும் சினிமார்க் என்னும் திரையரங்கில், “அகண்டா பட பார்வையாளர்களுக்கு… இங்கே அமைக்கப்பட்டிருக்கும் ஸ்பீக்கர்கள் சேதமடைய கூடாது என்பதற்காக குறிப்பிட்ட டெசிபலுக்கு கீழ்தான் ஒலி இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இங்கு திரையிடப்பட்டும் எல்லா படங்களுக்கும் இதே அளவுதான் ஒலி இருக்கும். அதனை உயர்த்தப்படமாட்டாது.” என்று முன்னறிவிப்பு விளம்பரத்தை போட்டுள்ளது.

உங்களின் உற்சாகத்தை கண்ட்ரோல் பண்ணுங்கள் என்று சொல்லும் அளவிற்கு பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் செயல்கள் இருந்து வருகின்றன. மேலும், இவர்களை செய்வதைப் பார்க்கும் போது, பாலய்யாவே பரவாயில்லை போலிருக்கு என்று நெட்டிசன்களும் நகைச்சுவையான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Views: - 308

0

0