கௌதம் மேனனுக்கு ஜோடியான அமலா பால், விஜய் சேதுபதிக்கு ஜோடியான அருவி பட நடிகை!

2 February 2021, 7:03 pm
Quick Share


காதல் கதையை மையப்படுத்திய குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி படத்தில், கௌதம் மேனனுக்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார்.


கொரோனா லாக்டவுன் காலகட்டத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் அதிகளவில் குறும்படங்கள் உருவாக்கப்பட்டு வெளியாகி வருகின்றது. ஏற்கனவே சில்லுக்கருப்பட்டி, பாவக் கதைகள், புத்தம் புது காதல் என்று ஆந்தாலஜி படங்கள் வெளியாகி உள்ளன. இந்த வரிசையில், தற்போது மற்றொரு ஆந்தாலஜி படமும் வெளியாக இருக்கிறது. கௌதம் மேனன், வெங்கட் பிரபு, ஏ.எல்.விஜய், நலன் குமாரசாமி ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆந்தாலஜி படம் குட்டி ஸ்டோரி.

முழுக்க முழுக்க காதல் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆந்தாலஜி படமான குட்டி ஸ்டோரி வரும் 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விஜய் சேதுபதி மற்றும் அதிதி பாலன் ஆகியோர் இணைந்து ஒரு பகுதியிலும், கௌதம் மேனன் மற்றும் அமலா பால் ஆகியோர் ஜோடி சேர்ந்து ஒரு பகுதியிலும், சாக்‌ஷி அகர்வால் மற்றும் வருண் ஆகியோர் ஒரு பகுதியிலும், மேகா ஆகாஷ் ஒரு பகுதியிலும் நடித்துள்ளனர். இந்த ஆந்தாலஜி படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதற்கு முன்னதாக வந்த பாவக் கதைகள் என்ற குறும்படத்தில் கௌதம் மேனன் மற்றும் சிம்ரன் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். அதோடு, இரு பெண் குழந்தைகளுக்கு அப்பா கதாபாத்திரத்தில் கௌதம் மேனன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்க்கது.

Views: - 2

0

0