“அஜித் எல்லாம் ஒன்னும் கொடுக்கல, ஏன் பொய் சொல்றீங்க?” அங்காடி தெரு பட நடிகை ஆவேசம் !

23 September 2020, 10:23 pm
Quick Share

சில வருடங்களுக்கு முன்பு சிறு படங்களும் முத்திரை பதித்தன, அதில் ஒன்று இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அங்கடி தெரு. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்தவர் மகேஷ். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்திருந்தார். அங்காடி தெரு படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு என பிஸியான முன்னணி நாயகியாகவும் மாறிவிட்டார் அஞ்சலி.

ஆனால், படத்தின் நாயகன் மகேஷ், தேடி வந்த பல நல்ல கதைகளை மிஸ் பண்ணிட்டேன், என்று புலம்பி கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் விலைமாதுவாக இருந்து அதன்பின்வ்திருந்தி ஒரு குள்ள மனிதரை திருமணம் செய்து அந்த குள்ள வியாபாரியை போலவே குழந்தையை பெற்றெடுத்து விட்டு அதற்கான விளக்கத்தை சொல்லும் அந்த சின்னம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சிந்து.

தற்போது இவருக்கு மார்பக புற்று நோய் ஏற்பட்டது அறுவை சிகிச்சை பணம் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவிற்கு பிறகு எந்தவித உச்ச நட்சத்திரத்தின் உதவியும் தனக்கு கிடைக்கவில்லை என்று புலம்பியுள்ளார்.

அந்த பேட்டியில் அஜித் குறித்து பேசிய சிந்து, அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சாரை ஒரு 10 முறை தொடர்பு கொண்டேன். ஆனால், அவர் அஜித்தை தொடர்புகொள்ள முடியலன்னு சொன்னார். வெளியில் சொல்றங்க அஜித்த பத்தி ஹாஹா ஓஹோனு.

இந்த தீப்பெட்டி கணேஷுக்கு கூட அஜித் சார் பணம் குடுத்தார்னு சொல்றது எல்லாம் போய். செஞ்சா செஞ்சன்னு சொல்லிட்டு போங்க. ஏன் இப்படி பொய் சொல்றீங்க” என்று ஆவேசமாகப் பேசியுள்ளார். வேடிக்கை என்ன என்றால் தீப்பெட்டி கணேசன் அவர்களுக்கு அஜித் உதவி செய்தார் என்று எந்த செய்தியும் வரவில்லை.

Views: - 0 View

0

0