மாஸ்டர் தளபதிக்காக சென்னை வந்த ஓ மை கடவுளே பட இயக்குநர்!

13 January 2021, 2:21 pm
Quick Share

மாஸ்டர் மற்றும் தளபதிக்காக மட்டுமே ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்ததாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கூறியுள்ளார்.

பல பிரச்சனைகளுக்குப் பிறகு தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. அதிகாலை முதலே தளபதியின் திவீர ரசிகர்கள் மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் பார்த்து மகிழ்ந்தனர். குடும்ப பெண்களும் கூட்டம் கூட்டமாக வந்து விஜய்யின் மாஸ்டர் படத்தை கண்டு ரசித்துள்ளனர்.
சரி ரசிகர்கள் தான் இப்படி இருக்கிறார்கள் என்று பார்த்தால் சினிமா பிரபலங்கள் அதுக்கும் மேலாக இருக்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ், அனிருத், அர்ஜூன் தாஸ், சாந்தணு, மாளவிகா மோகனன், கீர்த்தி சுரேஷ், உதயா ஆகியோர் மாஸ்டர் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்து ரசித்துள்ளனர்.மாஸ்டர் படத்தை திரையில் பார்த்து நடிகை கீர்த்தி சுரேஷ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ஒரு வருடம் முழுவதும் காத்திருந்து ஒரு தியேட்டருக்கு திரும்பி வருவது என்பது எவ்வளவு பரவசமாக இருக்கிறது என்பதை விவரிக்கக் கூட முடியாது. இன்னும் இதை விட சிறந்தது என்ன? இது தான் என்று பதிவிட்டதோடு இது மாஸ்டர் பொங்கல் டா என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மாஸ்டர் படத்திற்காகவே ஒருவர் ஹைதராபாத்திலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்துள்ளார். அந்தளவிற்கு தளபதி விஜய்யின் தீவிர ரசிகராக இருக்கிறார். ஆம், அவர் வேறு யாருமில்லை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தான். இவர், விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்த ஓ மை கடவுளே படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


அஸ்வத் மாரிமுத்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது: மாஸ்டர் மற்றும் தளபதிக்காக மட்டுமே ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு என்று தெரிவித்துள்ளார். இவர் மட்டுமல்லாமல், இவரைப் போன்று இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் வெளியில் சொல்லிக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.

Views: - 4

0

0