முதல் முறையாக விருது வாங்குன அஸ்வின்: அழ வைத்த புகழ்!

7 March 2021, 9:40 pm
Quick Share

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வினுக்கு Behindwoods Gold Icons என்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் தொலைக்காட்சியில் அதிக பிரபலமானவர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்த மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி பட த்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அஸ்வின் குமார். இதைத் தொடர்ந்து ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி என்ற தொடரின் மூலம் நாயகனாக வலம் வந்தார். இவருடன் இணைந்து பவானி ரெட்டி நடித்திருந்தார்.

இந்த தொடரில் இவர்கள் இருவரும் தான் முக்கியமான கதாபாத்திரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2ஆவது சீசனில் குக்காக கலந்து கொண்டு உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அஸ்வின் மற்றும் ஷிவாங்கி இருவரது கெமிஸ்டரி ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. இருவரும் திருமணம் செய்தால் கூட நன்றாக இருக்கும் என்று கூட ரசிகர்கள் விரும்புகின்றனர்.


இது ஒருபுறம் இருந்தாலும், Behindwoods Gold Icons என்ற தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் சமூகம் சார்ந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், தொலைக்காட்சியில் அதிக பிரபலமானவர் என்பதற்கான Behindwoods Gold Icons விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், கவின், அஸ்வின் மற்றும் புகழ் ஆகியோர் இணைந்து நடனமாடியுள்ளனர்.


இந்த நிகழ்ச்சியின் போது அஸ்வினிடம், காதலி உன்னை விட்டுவிட்டு சென்றால், உனது உணர்ச்சி எப்படியிருக்கும் என்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய புகழ் கேள்வி எழுப்பியுள்ளார். அதனை தத்ரூபமாக நடித்துக் காண்பித்த அஸ்வினின் கண்ணில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்டியுள்ளது. அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மற்றொரு தொகுப்பாளினி மணிமேகலை இப்படி விருது வாங்கிய அஸ்வினை அழ வைத்துவிட்டாயா என்று கூறியுள்ளார்.


இதைத் தொடர்ந்து, ஷிவாங்கியுடன் இணைந்து டான்ஸ் மற்றும் பாடல் பாடி அசத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 414

0

0