நர்ஸ் வேலை பார்க்கிறீர்களா? இல்லையா? – அப்போ ஒரு பதில்.. இப்போ ஒரு பதில்.. குழப்பும் ஜூலி

29 January 2021, 4:48 pm
Quick Share

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழகமெங்கும் ரீச் ஆனவர் ஜூலி. வீர தமிழச்சி, இரும்பு பெண்மணி என பலவாறாக போற்றப்பட்ட ஜூலி பிக் பாஸ் வந்த பிறகு அந்தப் பெயர் மொத்தமாக டேமேஜ் ஆனது. குறும்படம் உட்பட பல விஷயங்களில் அவரது பெயர் கண்ணா பின்னாவென்று அடி வாங்கத் தொடங்கியது. பிக்பாஸ் வருவதற்கு முன் செவிலியர் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஜூலி, அதன்பின் அந்த வேலையை விட்டுவிட்டு மாடலிங், நடிப்பு என பிஸியாக ஆனார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் ஜூலி, அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லுவார். அப்போது ரசிகர் ஒருவர் சமூகவலைதளத்தில், நர்ஸ் வேலையை ஏன் விட்டு விட்டீர்கள்? என்று கேட்டார். அதற்கு, நர்ஸ் வேலை என்பது புனிதமான வேலை. அந்த வேலையை செய்ய அர்ப்பணிப்பும் நிறைய உழைப்பும் தேவை. ஒரே நேரத்தில் இரண்டு வேலையை செய்ய முடியாது. சூட்டிங் காரணமாக வேலைக்கு தாமதமாக செல்ல வாய்ப்புகள் உள்ளது. இதனால் நோயாளிகள் காத்திருக்க வாய்ப்புள்ளது. நோயாளிகள் வாழ்க்கையில் விளையாட நான் விரும்பவில்லை என பதில் கூறினார்.

இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வேறு ஒருவர், நீங்கள் ஏன் நர்ஸ் வேலைக்கு செல்லவில்லை? பிக்பாஸில் இருந்தபோது நர்ஸ் வேலையை விட மாட்டேன் என்று கூறியிருந்தீர்களே? என கேட்ட கேள்விக்கு, வேறு விதமாக பதில் சொல்லியிருக்கிறார் ஜூலி. யாருக்கெல்லாம் சந்தேகம் இருக்கிறதோ, அவர்களுக்கெல்லாம் சொல்கிறேன் நான் அவசர நேரத்தில் மட்டும், செவிலியர் வேலையை பகுதி நேரமாக செய்கிறேன். என்னால் அதை முழு நேர தொழிலாக செய்ய முடியாததால் இவர் செய்கிறேன் என்று கூறினார். இவர் இப்படி மாறி மாறி பேசுவது அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Views: - 1

0

0