சண்டைக்காட்சியை முடித்த டான் டீம்!

Author: Udhayakumar Raman
12 March 2021, 8:53 pm
Quick Share

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தின் சண்டைக்காட்சிகள் முடிக்கப்பட்டுள்ளது என்று பட த்தின் ஸ்டண்ட் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். அனைவரது வீடுகளிலும் நம்ம வீட்டுப்பிள்ளையாக திகழ்கிறார். கடைசியாக வெளியான ஹீரோ படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு பெறவில்லை. தற்போது டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரு படங்களில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட டாக்டர் படம் வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று அயலான் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அயலான் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரு படங்களைத் தொடர்ந்து டான் படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் டான் படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக அதுவும், இன்ஜினியரிங் கல்லூரி மாணவராக நடித்துள்ளார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சமுத்திரக்கனி, பால சரவணன், முனீஷ்காந்த், காளி வெங்கட், ஷிவாங்கி, சூரி ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர்.


இந்த நிலையில், டான் பட த்தின் ஸ்டண்ட் காட்சிகள் முடிக்கப்பட்டுள்ளது என்று ஸ்டண்ட் மாஸ்டர் விக்கி நந்தகோபால் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ராட்சசன் மற்றும் சூர ரைப் போற்று ஆகிய படங்களுக்கு விக்கி நந்தகோபால் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிட த்தக்கது. இது குறித்து விக்கி நந்தகோபால் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: டான் ஸ்டண்ட் காட்சிகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்த அற்புதமான டீமுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. 2ஆவது கட்ட படப்பிடிப்பின் ஸ்டண்ட் காட்சிக்காக எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Views: - 67

0

0