டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் வில்லனா? ட்ரைலரை ரிப்பீட் மோடில் போட்டு பார்க்கும் ரசிகர்கள்

Author: Udhayakumar Raman
25 September 2021, 8:48 pm
Quick Share

சின்னத்திரையின் மூலம் தனது திறமையை காட்டி சினிமாவில் தற்போது ஓஹோவென உயர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். தனது நகைச்சுவை திறனால் குழந்தைகள் மற்றும் இல்லத்தரசிகளின் ஃபேவரட்டாக மாறினார். 3 திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தவர், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார்.

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சனின் அடுத்த படமான டாக்டர் படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இவருக்கு ஜோடியாக நானியுடன் கேங் லீடர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் யோகிபாபு, வினய் ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது.

ட்ரைலரை பார்த்த ரசிகர்கள், கோலமாவு கோகிலாவில் கொக்கைன் கடத்தியது போல இந்த படத்தில் குழந்தை கடத்தல் பற்றியும், உறுப்புகள் திருடப்படுவது பற்றயும் வருவதால் சிவகார்த்திகேயன் இதில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்று குழம்பி போயுள்ளனர். மேலும் அனிருத்தின் இசையை மெச்சியுள்ள ரசிகர்கள் ட்ரைலரை ரிப்பீட் மோடில் பார்த்து வருகிறார்கள்.

Views: - 266

10

0