நிக்கி கல்ராணியின் விலையுயர்ந்த ஆடைகள் திருட்டு: சிசிடிவியால் சிக்கிய பணியாளர் தனுஷ்…போலீசில் புகார்..!!

Author: Rajesh
19 January 2022, 8:59 am
Quick Share

சென்னை: நடிகை நிக்கி கல்ராணியின் வீட்டில் விலையுயர்ந்த ஆடைகள் மற்றும் கேமராவை திருடிச் சென்ற வீட்டின் பணியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டார்லிங் என்ற படம் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நிக்கி கல்ராணி, சமீபத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ராஜவம்சம் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். தனது வீட்டில் சில விலையுயர்ந்த பொருட்கள் காணாமல் போனதாக, அண்ணாசாலை காவல்நிலையத்தில் நிக்கி கல்ராணி புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில் தனது வீட்டில் வேலை பார்ப்பதற்காக தனியார் ஏஜென்சி மூலம் நியமிக்கப்பட்ட தனுஷ் என்பவர் விலை உயர்ந்த பொருட்களை திருடிச் சென்றதாகக் கூறியிருந்தார். மேலும், அவர் தற்போது வேலைக்கும் வருவதில்லை எனவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகாரை அடுத்து விசாரணை செய்ததில், தனுஷ் திருப்பூரில் உள்ள தனது நண்பர் வீட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், பணியாளர் தனுஷ் பொருட்களை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்ட போலீசார் பதுங்கி இருந்த தனுஷை போலீசார் கைது செய்தனர்.

விசாரனையில், அவர் நிக்கி கல்ராணியின் வீட்டில் இருந்து விலை உயர்ந்த கேமராவை திருடி அதை விற்றதாக வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து கேமரா மற்றும் நடிகை நிக்கி கல்ராணியின் ஆடைகளை பறிமுதல் செய்த போலீசார் பிடிபட்ட தனுஷை சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 328

0

0