வாக்குச்சாவடியில் அஜித்தை தொந்தரவு செய்த ரசிகர் – கோபமான அஜித் – வைரல் வீடியோ !

6 April 2021, 9:55 am
Ajith Shalini - Updatenews360
Quick Share

தல அஜித் என்றால் ஒரு பெரிய மாஸ் ஃபேன் Base உள்ளது என்பது உலகறிந்த விஷயம். சமீபத்தில் வெளிவரும் அஜித்தின் படங்கள் வசூலில் சாதனைகள் படைத்து வருகிறது.

இவர் எப்போது வெளியே வருவார்? எங்கு இவரை பார்க்கலாம்? என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் இவரை பார்த்து புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக காத்துக் கிடக்கின்றனர். இவரும் மற்ற நடிகர்களை போல அலட்டிக்கொள்ளாமல் ரசிகர்களோடு தோள் மீது கை வைத்து புகைப்படத்தை எடுத்துக் கொண்டுள்ளார்.

இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ஐந்து வருடத்திற்கு ஒரு முறை தனது வாக்கினை பதிவு செய்வதற்காக வாக்குச் சாவடிக்கு வரும் அஜித்தை பல ரசிகர்கள் தொந்தரவு செய்து அவரை கேட்காமல், அவரின் அனுமதி இல்லாமல், முகத்துக்கு முன்னாடி போனை நீட்டி செல்பி எடுத்துக் கொள்வார்கள். இது இவருக்கு மட்டும் இல்லை சாதாரண நடிகர்களுக்கு கூட இது நடக்கும்.

அதிலும் கொரோனா அதி வேகமாக பரவும் இந்த நேரத்தில் மாஸ்க் போடாமல், க்ளவுஸ் போடாமல், பாதுகாப்புக்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் பல கோடி ரூபாய் வியாபாரம் உள்ள ஆட்களின் பாதுகாப்பு கருதாமல், அவர்களின் முகத்திற்கு முன்னாடி ஒரு செல் ஃபோனை நீட்டி ஒரு ரசிகர் நடந்துகொண்ட விதம் அஜித்தை மிகக்கடுமையாக கோபப்படுத்தியது.

உச்ச கோபத்தில் இருந்த அஜித் போனை அந்த ரசிகரிடம் இருந்து பிடுங்கி விட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. அஜித்தை எதை வைத்து விமர்சனம் செய்யலாம்? என்று காத்துக்கொண்டிருந்த விஜய் ரசிகர்களுக்கு லட்டு மாதிரி அமைந்தது அந்த வீடியோ.

Views: - 69

5

1