“பூஜா வா..பூஜா வா…” தளபதி 65 – இல் விஜயுடன் ஜோடி போடும் பூஜா ஹெக்டே !

Author: Udhayakumar Raman
24 March 2021, 5:30 pm
Quick Share

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய், இவரது நடிப்பில் இறுதியாக மாஸ்டர் திரைப்படம் வெளியானது. இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன், விஜய் 65 படத்தை முருகதாஸ் இயக்குவார், சுதா கொங்கரா விஜய் படத்தை இயக்குவார்,

வெற்றிமாறன் விஜய் படத்தை இயக்குவார், அருண் காமராஜ் விஜய் படத்தை இயக்குவார் என பல பெயர்கள் அடிபட்டு வந்தாலும் விஜய் டிக் செய்த டைரக்டர் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய வளர்ந்து வரும் நெல்சன் அவர்கள்தான்.

இந்த நிலையில் சில நொடிகளுக்கு முன் சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் வலைதளத்தில், பூஜா ஹெக்டே இந்த படத்தில் விஜயுடன் ஜோடி சேரபோவதாக அறிவித்துவிட்டது.

மேலும், வழக்கம்போல் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். யோகி பாபு நடிக்க இருக்கிறார். காமெடி படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் மேலும் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்கிற தகவல் தயாரிப்புக் குழு விரைவில் அறிவிப்பார்கள் என நம்பப்படுகிறது.

Views: - 84

10

0