சூரரைப்போற்று படத்தில் சூர்யா அருமையாக நடித்திருந்தார் – புகழ்ந்த இந்திய வீரர்! மாஸ்டருக்கும் பரிந்துரை.!

30 January 2021, 10:39 pm
Sooraipotru - Updatenews360
Quick Share

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பரிதாபமாக தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரகானே தலைமையிலான இந்திய அணி வீறு கொண்டு எழுந்தது. கோலி இல்லாத நிலையில் சிட்னி, மெல்போர்ன், கப்பா என மூன்று மைதானங்களிலும் நடைபெற்ற போட்டியில் சிறப்பாக வழிநடத்தினார். அதுமட்டுமில்லாமல் 2-1 வென்று தொடரை கைப்பற்றினார். அதுமட்டுமின்றி லியானிற்கு 100வது டெஸ்ட் விளையாடிதற்காக கையொப்பமிட்ட ஜெர்ஸி வழங்கியது, கங்காரு இருந்த கேக்கை வெட்ட மறுத்தது என பல விஷயங்களில் ஜென்டில்மேனாக நடந்து கொண்டார்.

தற்போது இங்கிலாந்து அணியுடன் விளையாடுவதற்கு சென்னை வந்திருக்கும் ரகானேவிடம் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி கேட்டு வருகின்றனர். அதில் ஒருவர் உங்களை சென்னைக்கு வரவேற்கிறேன், தமிழ் படம் ஏதாவது பார்த்தீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த ரகானே, “சூர்யா நடித்த சூரரைப்போற்று படத்தை சப் டைட்டிலோடு பார்த்தேன். படம் எனக்கு பிடித்திருந்தது. சூர்யா சிறப்பாக நடித்துள்ளார்” என்று பதில் கூறினார்.

ரஹானேவின் இந்த பதில் இணையத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து, சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் அவரை மென்ஷன் செய்து மாஸ்டர் படம் பார்த்து விட்டீர்களா என அவருக்கு பரிந்துரை செய்துள்ளார். இதற்கு முன் அஸ்வின் மாஸ்டர் படத்தைப் பற்றி ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0