மேடையில் பிரியா பவானி ஷங்கரிடம் அத்து மீறிய KPY பாலா – வைரல் வீடியோ!

Author: Shree
19 April 2023, 10:08 am
kpy bala
Quick Share

சினிமா பின்பலமே இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்து திறமையால் முன்னேறிய பிரபலங்கள் கோலிவுட் சினிமாவில் பலர் உள்ளனர் அந்த லிஸ்டில் டாப் நடிகையாக மார்கெட் பிடித்திருப்பவர் தான் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் நுழைந்தார்.

ஆரம்பத்தில் நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார்.

அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார், ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது. ஹாட்ஸ்டார் இல் ரிலீஸான ‘ஓ மன பெண்ணே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. Blood Money என்கிற படமும் ஓரளவுக்கு வரவேற்பு இருக்கிறது. அதையடுத்து அண்மையில் ராகவா லாரன்ஸ் உடன் நடித்த ருத்திரன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் ருத்ரன் படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் பிரியா பவானி ஷங்கர் ட்ரெண்டிங் பாடலான “பாடாத பாட்டெல்லாம் பாட வந்தால்”பாடலுக்கு நடனமாட சொல்லி கிகி விஜய் கேட்டார்…அதற்கு பிரியா, படத்தில் நான் மாஸ்டருடன் ஆடியிருப்பேன் இப்போ எப்புடி என கேட்க? உடனே பாலா சென்று பிரியாவுடன் ஓவர் Performance செய்து ஒரு நிமிஷம் பிரியா பவானி ஷங்கரை மெர்சலாக்கிவிட்டார். இதனை லாரன்ஸ் , அவரது அம்மா மற்றும் ஆடியன்ஸ் எல்லோரும் ஷாக் ஆகி ரசித்த அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்:

Views: - 1192

105

33