‘மாஸ்டர்’ தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பே இல்லை – தயாரிப்பு நிறுவனம்

2 November 2020, 4:12 pm
Quick Share

விஜயின் மாஸ்டர் திரைப்படம், வரும் தீபாவளிக்கு திரைக்கு வராது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள அப்படம், கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அன்று திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால், படம் திரைக்கு வரவில்லை. இந்நிலையில், 10ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி வழங்கியதையடுத்து, மாஸ்டர் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில், வி.பி.எஃப் கட்டண விவகாரத்தில் திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் இடையே மோதல்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து படத் தயாரிப்பாளர் லலித் குமார், தீபாவளிக்கு படத்தை திரையிடும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார்.

Views: - 18

0

0