கொழு கொழுன்னு இருக்கும் விக்னேஷ் சிவன்… கும்முனு இருக்கும் நயன்தாரா – ரீசன்ட் கிளிக்ஸ் வைரல்!

Author: Shree
18 April 2023, 8:30 pm
nayanthara vignesh shivan
Quick Share

மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார், அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

பின்னர் வடை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். மகன்களுக்கு “உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் ” என தன் பெயரையும் நயன்தாரா பெயரையும் உயிர் , உலகம் என்பதன் அடிப்படையில் வைத்துள்ளனர்.

இந்நிலையில் நயன்தாரா கேரள சேலையில் மல்லிகைப்பூ, நெற்றியில் குங்குமம் என ஹோம்லி மனைவி போன்றும், விக்னேஷ் சிவன் பட்டு வேட்டி பட்டு சட்டை அணிந்து புது மாப்பிளை போன்றும் கேரள மக்களால் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படும் விசுவை கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் ரசனைக்கு உள்ளாகியுள்ளது. நயன்தாரா தற்போது ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 678

10

5