மலையாளத்தில் ரீமேக் ஆகும் அந்தாதுன் – ப்ருத்விராஜுடன் உடன் ஜோடி சேரும் ராஷி கண்ணா

24 January 2021, 7:24 pm
Quick Share

ஒரு மொழியில் ஹிட்டான படத்தை இன்னொரு மொழியில் ரீமேக் செய்வது சாதாரணமாகிவிட்டது. தென்னிந்திய மொழி படங்களான பிரேமம், ஆதித்யா வர்மா, திரிஷ்யம் போன்ற படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி இந்திப் படங்களும் தற்போது தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படுகின்றன. தற்போது அந்த வரிசையில் இந்தியில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான அந்தாதுன் திரைப்படம் தமிழ், மலையாளம் தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது.

இந்தியில் ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடித்த இந்தப் படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்தார். மிகப்பெரும் ஹிட்டாகி வசூலை குவித்து இந்த படம் 3 தேசிய விருதுகளை வாங்கியது. இதனடையில் இதன் ரீமேக் உரிமத்தை தமிழில் நடிகர் பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் பெரிய தொகை கொடுத்து வாங்கியிருந்தார். கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் தினம் அன்று இந்த படத்தின் அறிவிப்பை ஒரு பாடலாக வெளியிட்டிருந்தார்கள். அந்தகன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஜேஜே பெட்ரிக் இயக்குகிறார். தெலுங்கு ரீமேக்கில் நிதின், தமன்னா ஆகியோர் நடிக்கிறார்கள்.

அதேபோல மலையாளத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரித்திவிராஜ் நடிக்கிறார். ஏழாம் அறிவு ஆதித்யா வர்மா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ரவி கே சந்திரன் இந்தப் படத்தை இயக்குகிறார். இதில் பிரித்திவிராஜ் ஜோடியாக ராஷி கண்ணா நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 27ஆம் தேதி மேலும் இந்த படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Views: - 8

0

0