சிம்பு நடித்த ‘கான்’ திரைப்படம் தான், இப்போ தனுஷ் நடிக்கும் ‘ நான் வருவேன் ‘ படமா ? – செல்வராகவன் வெளியிட்ட மாஸான அப்டேட்

13 January 2021, 7:51 pm
Quick Share

செல்வராகவன்- தனுஷ் கூட்டணி என்றும் மாஸ் படங்களாக கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் 2010 செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் அப்போது சொல்லி கொள்ளும் அளவு ஓடவில்லை. ஆனால் ரசிகர்களுக்கு அதன் பின் பிறந்த ஞானோதயத்தால் இப்படத்தை ஆஹா ஓஹோ என கொண்டாடத் தொடங்கினார்கள்.

பத்து வருடத்திற்குப் பின் மீண்டும் சமீபத்தில் தியேட்டர்களில் ரிலீஸான அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாகவும், இதில் தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியே அமையும் என செல்வராகவன் ட்வீட் செய்திருந்தார். இன்று ஏழு மணிக்கு அப்டேட் வெளியாகும் என ட்வீட் செய்திருந்தார் செல்வராகவன்.

பழைய சிவாஜி படங்கள் போலவே சமீபகாலமாக டைட்டில் வைத்து வரும் செல்வராகவன் இந்த படத்திற்கும் அதே மாதிரி ஒரு பெயரை வைத்திருக்கிறார். ‘நானே வருவேன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக்கை வெளியிட்டிருக்கிறார். ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்க அதற்கு நேர் மாறாக ஒரு புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறார்.

போஸ்டரில் தனுஷ் மிக ஸ்டைலாக சுருட்டு பிடித்துக்கொண்டு அவருக்குப் பின்னால் துப்பாக்கிகள் இருக்கும் மாதிரி வேற ரகமாக அசத்தலாக இருக்கிறது. மேலும் இந்த படம் சிம்பு-செல்வராகவன் கூட்டணியில் உருவாகவிருப்பதாக இருந்த ‘கான்’ படத்தின் கதையாக இருக்குமோ என ரசிகர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

Views: - 8

0

0