ஃபார்முக்கு வந்த ஷிவானி நாராயணன் – 4 மணி சிலுக்கு is back

25 January 2021, 5:57 pm
Quick Share

சமீபகாலமாக இன்ஸ்டா மாடல் என்கிற பேச்சு அதிகமாகி வருகிறது. அதற்கெல்லாம் முன்னோடி, தினசரி நாலு மணிக்கு ஒரு போட்டோவை பதிவிடும் ஷிவானி நாராயணன். இவருக்கு 19 வயதே ஆகியிருக்கும் நிலையில் விஜய் டிவியில் வரும் ஒரு நாடகத்தில் நடித்தார். இவரது டிக் டாக் வீடியோக்களை பார்த்த பின்பு தான் இவரை நாடகத்தில் நடிக்க வைத்தனர். அதுமட்டுமில்லாமல் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஜாஸ்தி என்பதால் பிக்பாஸ் 4 வது சீசனில் உள்ளே கொண்டு வந்தார்கள்.

எப்போதும் நாலு மணிக்கு போட்டோ போடும் ஷிவானியை இனிமேல் பார்க்க முடியாது என ரசிகர்கள் ஏங்கியிருந்த போதும் தனது பழைய போட்டோக்களை அட்மினிடம் கொடுத்து அவ்வப்போது பதிவு செய்யச் சொல்லியிருக்கிறார். பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற பின் இத்தனை நாட்கள் தாக்கு பிடிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இவரது ரசிகர்கள் இவரை 70 நாட்களை தாண்டி உள்ளே இருக்க வைத்தார்கள்.

தற்போது வெளியே வந்தபின், மீண்டும் தனது போட்டோஷூட் ஆயுதத்தை கையில் எடுத்திருக்கும் ஷிவானி புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். தற்போது பதிவேற்றி இருக்கும் புகைப்படத்தில் செக்கச்செவேலென்று ஆடையணிந்து இலைமறை காயாக கவர்ச்சி காட்டியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் “தலைவி மீண்டும் ஃபார்முக்கு வந்துட்டாங்க’ என குதூகலத்தில் உள்ளனர்.

Views: - 13

0

0