தயாரிப்பாளர் சங்கம் எடுக்கவிருக்கும் படத்தில் நடிக்கும் சிம்பு – அறிக்கை வெளியிட தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்

2 February 2021, 10:25 pm
Quick Share

கொரோனா காலகட்டம் எண்ணற்ற பேருக்கு பொல்லாத காலமாக மாறியிருந்தாலும் சிம்புவிற்கு பல மாற்றத்தை கொடுத்துள்ளது. எப்போதும் படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது, குறிப்பிட்ட தேதிக்குள் படத்தை முடித்து கொடுக்காமல் காலம் தாழ்த்துவது என பல கெட்ட பெயர்களை வாங்கியிருந்த சிம்பு, தற்போது உடல் எடையை குறைத்து படத்தை சொன்ன தேதிக்கு முன்னரே முடித்துக் கொடுக்கும் அளவு மாறியிருக்கிறார்.

அதன் பொருட்டு பாண்டிராஜ் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்த சிம்பு, விரைவில் அந்த படத்தை நடித்து முடித்துக் கொடுத்தார். தற்போது பொங்கலுக்கு வெளிவந்து சொல்லிக் கொள்ளுமளவு வசூலையும் குவித்து உள்ளது. அடுத்தடுத்து மாநாடு பத்துதல போன்ற படங்கள் வெளியீடுக்காக வரிசை கட்டி நிற்கிறது. அவ்வபோது தயாரிப்பாளர் சங்கம் சார்பாக சிம்புவிற்கு பிரச்சனைகள் வந்து கொண்டிருக்க, தற்போது தயாரிப்பாளர் சங்கம் எடுக்கும் படத்தில், தான் நடித்து தருவதாக சிம்பு கூறியிருக்கிறார்.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நிதி திரட்டும் பொருட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தலாமா என பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கையில், தாமாக முன்வந்து படம் நடித்துக் கொடுப்பதாக சிம்பு கூறியிருக்கிறார். இந்த படத்தை வானம் படத்துக்கு வசனம் எழுதிய திரு ஞானகிரி அவர்கள் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் 2021 க்குள் முடிக்கப்பட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் மூலம் கிடைக்கும் தொகையை நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு மருத்துவச் செலவிற்கும், வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு போன்ற செலவுகளுக்கு பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

Views: - 0

0

0