கல்யாண மாப்பிள்ளையுடன் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போட்ட வரலட்சுமி சரத்குமார்!

Author: Poorni
27 March 2021, 1:27 pm
Quick Share


திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நடிகை வரலட்சுமி சரத்குமார் மணமகனுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

சிம்பு நடித்த போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, மிஸ்டர் சந்திரமௌலி, சண்டக்கோழி 2, சர்கார், மாரி 2, நீயா 2, வெல்வெட் நகரன், கன்னி ராசி என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.


தற்போது இவரது நடிப்பில் காட்டேரி, பாம்பன், கலர்ஸ், யானை, பிறந்தால் பராசக்தி, சேஸிங் வாகிய படங்கள் உருவாகி வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த வரலட்சுமி சரத்குமார், மணமகன் உடன் இணைந்து பல பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். ஆம், ரௌடி பேபி, வாத்தி கம்மிங் உள்பட பல பாடல்களுக்கு மணமகனுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/tv/CMzxPszAPPe/?utm_source=ig_web_copy_link

Views: - 178

4

2