வைரலாகும் தளபதி 65 ஷூட்டிங் ஸ்பாட் பிக்ஸ்!

8 April 2021, 8:27 pm
Quick Share

விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி65 பட த்தின் ஜார்ஜியா ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, விஜய், தளபதி65 படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தளபதி65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். அன்பு மற்றும் அறிவு ஆகியோர் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றுகின்றனர்.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ஜானி மாஸ்டர் படத்திற்கு நடன இயக்குநராக பணியாற்றுகிறார். வரும் 24ஆம் தேதி பாடலுக்கு ரிகர்ஷல் நடக்க இருக்கிறது. இதைத் தொடர்ந்து வரும் மே 3 ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை சாங் ஷூட்டிங் நடக்கிறது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி சன் டிவி ஸ்டூடியோவில் தளபதி65 படத்திற்கு மிகவும் எளிமையான முறையில் பூஜை நடந்துள்ளது. இதில், விஜய் ஸ்டைலாக, கெத்தாக கலந்து கொண்டார். இவருடன் இணைந்து படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து சென்னையில் மட்டும் 2 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
இதையடுத்து, தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார். அதன் பின்னர், விஜய், ஜார்ஜியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் சென்னை விமான நிலையத்திற்கு வந்த புகைப்படம், வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

ஜார்ஜியாவில் நடக்கும் 10 அல்லது 16 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அதன் சிறிய இடைவெளிக்குப் பிறகு சென்னையில் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜார்ஜியாவில் தளபதி65 படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: -

3

0