உலகநாயகன் கமல்ஹாசனின் வில்லனாக விஜய்சேதுபதி?

9 November 2020, 5:04 pm
Quick Share

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது வெளியீட்டிற்காக காத்திருக்கும் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்திலும் அவர் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவிருக்கும் விக்ரம் திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அணுகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாஸ்டர் திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜே இத்திரைப்படத்தையும் இயக்கவிருக்கிறார்.

விஜய் சேதுபதி, விக்ரம் திரைப்படத்தின் டைட்டில் டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு சிறப்பு என்று பதிவு செய்திருந்தார்.

இச்செய்தி மட்டும் உறுதியாகும் பட்சத்தில் படத்தின் எதிர்பார்ப்பு மேலும் பன்மடங்கு எகிறும் என்பது உறுதி.

Views: - 14

0

0