எப்போ பார்த்தாலும் சோர்வா இருக்கா… வாரம் இருமுறை இந்த சூப் சாப்பிடுங்க.. எல்லாம் சரியாகிடும்!!!

Author: Hemalatha Ramkumar
31 October 2022, 7:23 pm
Quick Share

பொதுவாக பெண்களிடையே அடிக்கடி காணப்படும் இரத்த சோகை பிரச்சினையை குணப்படுத்த மருந்து, மாத்திரைகள் எடுக்கப்படுகிறது. இரத்த சோகை ஒருவரை சோர்வாக மாற்றி விடும். இதனால் அன்றாட வேலைகளில் தடை ஏற்படலாம். இதனை உணவுகள் மூலமாகவே எளிதில் சரி செய்து விடலாம். அந்த மாதிரியான ஒரு உணவு தான் முருங்கை கீரை சூப். இதற்கான ரெசிபியை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: தனியா விதைகள் – மூன்று தேக்கரண்டி
சீரகம் – இரண்டு தேக்கரண்டி
மிளகு – இரண்டு தேக்கரண்டி கருவேப்பிலை – ஒரு கொத்து
பூண்டு – பத்து பற்கள் முருங்கை இலைகள் – ஒரு கப்
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – ஆறு கல் உப்பு – தேவையான அளவு

தாளிக்க:
நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி

செய்முறை:
*முதலில் முருங்கை கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.

*ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தனியா, மிளகு, சீரகம் சேர்த்து வறுக்கவும்.

*இதனுடன் ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் தோலுரித்த பூண்டு பற்கள் சேர்த்து கொள்ளவும்.

*வாசனை வரும் வரை வறுத்து, பின்னர் ஆற வைத்து அரைத்து தனியாக வைக்கவும்.

*அடுத்து ஒரு அகலமானபாத்திரத்தில் ஆறு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

*தண்ணீர் கொதிக்கும் போது முருங்கை கீரை, மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

*பின்னர் நாம் அரைத்து வைத்த பொடியையும் கலந்து கொள்ளலாம்.

*ஆறு நிமிடங்கள் கொதித்த பின் வடிக்கட்டி எடுக்கவும்.

*மீதமுள்ள இலைகளையும் அரைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதனை வடிகட்டி சேர்த்து கொள்ளலாம்.

*இப்போது இதனை தாளிக்க எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிக்க விட்டு சூப்பில் சேர்த்தால் சுவையான மற்றும் ஆரோக்கியமான முருங்கை கீரை சூப் தயார்.

Views: - 196

0

0