மருத்துவ குணங்கள் நிறைந்த கொள்ளு ரசம் ரெசிபி!!!

Author: Hemalatha Ramkumar
15 May 2022, 1:51 pm
Quick Share

ரசத்தில் பல வகை உண்டு. நாம் இன்று பார்க்க இருப்பது கொள்ளு ரசம். இது உடலுக்கு வலிமையும், ஆரோக்கியமும் தரக்கூடியதாகும். உடல் எடையை குறைக்கவும், சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை‌ சரி செய்யக்கூடியது.
மிகவும் சுவையான, கமகமக்கும் கொள்ளு ரசம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
கொள்ளு -100 கிராம்

சீரகம் – 1/2 டீஸ்பூன்

மிளகு- 1/2 டீஸ்பூன்

பூண்டு – 8 பற்கள்

கொத்தமல்லி இலைகள் – தேவையான அளவு

கறிவேப்பிலை – தேவையான அளவு

வரமிளகாய் -1

பச்சைமிளகாய் – 1

தக்காளி -1

புளி – எலுமிச்சை அளவு

கடுகு – 1/4 டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன்

வெந்தயம் – 1/4 டீஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

உப்பு – 1/2 டீஸ்பூன்

செய்முறை:
*ஒரு கடாயை சூடாக்கி அதில் கொள்ளு சேர்க்கவும்.
கொள்ளு மனம் வரும் வரை மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும்.

*பின்பு வறுத்த கொள்ளுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

*விசில் அடங்கியதும் கொள்ளு வேக வைத்த தண்ணீரை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி புளியை பத்து நிமிடம் ஊற வைக்கவும்.

*மிக்ஸி ஜாரில் சீரகம், மிளகு, பூண்டு, பச்சைமிளகாய் மற்றும் சிறிது கருவேப்பில்லை சேர்த்து கர கரவென அரைத்து எடுக்கவும்.

*ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், வரமிளகாய், சிறிது கருவேப்பில்லை சேர்க்கவும்.

*பின்பு அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் பெருங் காயத்தூள் சேர்த்து கிளறி கரைத்து வைத்த புளி கரைசலை வடிகட்டி சேர்க்கவும். அதனுடன், தக்காளியையும் மசித்து சேர்த்துக் கொள்ளவும்.

*பின்பு வடிகட்டி வைத்துள்ள கொள்ளு தண்ணீரை சேர்க்கவும்.

*ரசம் கொதி வரும் முன் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து கொத்தமல்லி இலை களை தூவி விடவும்.

*இப்போது சுவையான கொள்ளு ரசம் தயார். சூடான சாதத்துடன் பரிமாறலாம்.

*வேக வைத்த கொள்ளை பொறியல் அல்லது கொள்ளு சுண்டல் செய்து பரிமாறலாம்.

Views: - 740

0

0