உருளைக்கிழங்கு சாதம்: இத செய்து கொடுத்தா உங்க வீட்டு குட்டீஸ் சமத்தா லன்ச் பாக்ஸ் காலி பண்ணிட்டு வந்துடுவாங்க!!!

Author: Hemalatha Ramkumar
27 March 2023, 7:44 pm
Quick Share

குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸ் தயார் செய்வது ஒரு பெரிய வேலை. கொடுத்துவிடும் அனைத்தையும் குழந்தைகள் சாப்பிட்டு விட்டு வருவதில்லை. ஆனால் இன்று நாம் பார்க்க போகும் ரெசிபியை தினமும் செய்து கொடுத்தால் கூட சமத்தா லன்ச் பாக்ஸ் காலி பண்ணிட்டு தான் வருவாங்க. அப்படி என்ன ரெசிபின்னு பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:
வேக வைத்த சாதம்- 1கப்
நறுக்கிய வெங்காயம்- 2
நறுக்கிய தக்காளி- 2
நறுக்கிய உருளைக்கிழங்கு- 2
நறுக்கிய இஞ்சி- 1/4 தேக்கரண்டி
நறுக்கிய பூண்டு- 1/4 தேக்கரண்டி
கடுகு- 1/2 தேக்கரண்டி
சோம்பு- 1/4 தேக்கரண்டி
சீரகம்- 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை- ஒரு கொத்து
எண்ணெய்- 3 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு

செய்முறை:
*பொட்டேட்டோ ரைஸ் செய்வதற்கு முதலில் ஒரு கடாயில் மூன்று தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.

*எண்ணெய் காய்ந்த பின் கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

*கடுகு பொரிந்த பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.

*வெங்காயம் ஓரளவு வதங்கியதும் பொடியாக நறுக்கிய சேர்த்து வதக்கவும்.

*இந்த சமயத்தில் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து கிளறவும்.

*தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

*உருளைக்கிழங்கு வெந்ததும் வடித்த சாதம் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிளறினால் சுவையான உருளைக்கிழங்கு சாதம் ரெடி.

Views: - 271

0

0