வெயிலுக்கு ஏற்ற 4 விதமான அருமையான தர்பூசணி ஜுஸ்!

Author: Hemalatha Ramkumar
9 March 2023, 10:15 am
Quick Share

Images are © copyright to the authorised owners.

Quick Share

வெயில் காலம் ஆரம்பித்து விட்டாலே அடிக்கிற வெயிலுக்கு ஏதாவது ஜில் என்று குடிக்க வேண்டும் என்று அடிக்கடி எண்ணம் வரும். இதற்காகவே ப்ரிட்ஜில் தண்ணீர் வைத்து ஜில் என்று தண்ணீர் குடிப்போம். அல்லது வீட்டிலேயே செய்தோ கடைகளில் இருந்து ஜில் என்று ஜுஸ் வாங்கியோ குடிப்போம். வெயிலுக்கு ஏற்ற அப்படிப்பட்ட ஒரு ஜுஸ் தான் தர்பூசணிப் பழ ஜுஸ். இதனை வீட்டிலே எளிதில் செய்யலாம். அது மட்டும் அல்ல, இன்று நாம் நான்கு விதமான தர்பூசணிப் பழ ஜுஸ் ரெசிப்பி பார்க்கப் போகிறோம்.

  • ரெசிப்பி 1: முதலில் ஒரு தர்பூசணியை எடுத்து கியூப்களாக வெட்ட வேண்டும். அடுத்து அதில் உள்ள விதைகளை அகற்றிக் கொள்ளவும். அதன் பின்னர் இந்த விதை நீக்கப்பட்ட தர்பூசணி கியூப்களை ஒரு பிளெண்டரில் அரைக்கவும். வடிகட்டி கொண்டு சாற்றை வடிகட்டவும். அவ்வளவு தான், ஐஸ் கியூப்கள் சேர்த்து அல்லது ப்ரிட்ஜில் குளிர வைத்து குடிக்கலாம்.  
  • ரெசிப்பி 2: முன்பு சொன்னது போல் முதலில் ஒரு தர்பூசணியை எடுத்து கியூப்களாக வெட்ட வேண்டும். அடுத்து அதில் உள்ள விதைகளை அகற்றிக் கொள்ளவும். அதன் பின்னர் இந்த விதை நீக்கப்பட்ட தர்பூசணி கியூப்களை ஒரு கைப்பிடி புதினா இலைகள் சேர்த்து ஒரு பிளெண்டரில் அரைக்கவும். அடுத்து வடிகட்டி கொண்டு சாற்றை வடிகட்டவும். அவ்வளவு தான், ஐஸ் கியூப்கள் சேர்த்து அல்லது ப்ரிட்ஜில் குளிர வைத்து குடிக்கலாம்.
  • ரெசிப்பி 3: அதே போல் முதலில் ஒரு தர்பூசணியை எடுத்து கியூப்களாக வெட்டிக் கொள்ள வேண்டும். அடுத்து அதில் உள்ள விதைகளை நீக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். இந்த விதை நீக்கப்பட்ட தர்பூசணி கியூப்களை ஒரு முழு எலுமிச்சைப் பழம் சாறுடன் சேர்த்து ஒரு பிளெண்டரில் அரைக்கவும். அடுத்து வடிகட்டி கொண்டு சாற்றை வடிகட்டவும். அவ்வளவு தான், அப்படியே குடிக்கலாம். அல்லது ஐஸ் கியூப்கள் சேர்த்து அல்லது ப்ரிட்ஜில் வைத்து குடிக்கலாம். 
  • ரெசிப்பி 4: இதிலும் முதலில் ஒரு தர்பூசணியை எடுத்து கியூப்களாக வெட்டிக் கொள்ள வேண்டும். அடுத்து அதில் உள்ள விதைகளை நீக்க வேண்டும். இந்த விதை நீக்கப்பட்ட தர்பூசணி கியூப்களை ஒரு கைப்பிடி அளவு ஸ்ட்ராபெர்ரிகளைச் சேர்த்து ஒரு பிளெண்டரில் அரைக்கவும். அடுத்து வடிகட்டி கொண்டு சாற்றை மட்டும் வடிகட்டவும். அவ்வளவு தான், சுவையான ஜுஸ் தயார். இதனை அப்படியே குடிக்கலாம். அல்லது ஐஸ் கியூப்கள் சேர்த்து அல்லது ப்ரிட்ஜில் வைத்து குடிக்கலாம். 

Views: - 128

0

0