தரிசனம் செய்ய சிறப்பு கவுன்ட்டரில் நின்ற பக்தரிடம் பிளேடு போட்டு ரூ.20 ஆயிரம் அபேஸ் : சமயபுரம் கோவிலில் அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 August 2022, 5:35 pm
Theft in Samayapuram Temple - Updatenews360
Quick Share

திருச்சி : தரிசனம் செய்ய சிறப்பு கவுண்டரில் வரிசையில் சென்ற பக்தரிடம் பிளேடு போட்டு ரூ. 20 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற பலே ஆசாமி.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் தரிசனம் செய்ய சிறப்பு கவுண்டரில் வரிசையில் சென்ற பக்தரிடம் பிளேடு போட்டு ரூ. 20 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற பலே ஆசாமி.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா விராலிமலை ஒன்றியம் லெட்சுமணபட்டி ஊராட்சியில் உள்ள சின்னபாண்டுராம்பட்டியைச் சேர்ந்தவர் பச்சைமுத்து (வயது 50).

விவசாயியான இவருக்கு ஜோதி என்ற மனைவியும், காயஸ்ரீ என்ற மகளும், ஓம்பிராஷ் என்ற மகனும் உள்ளார். இவருடைய மனைவி ஜோதி லெட்சுமணபட்டி ஊராட்சி மன்ற தலைவியாக பதவி வகித்து வருகிறார்.

நாளை இவருடைய மகன் பிறந்தநாளை முன்னிட்டு துணி எடுப்பதற்காக இருபதாயிரம் பணம் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்தார்.

அப்போது சிறப்பு கவுண்டர் 100 ரூபாய் கட்டண தரிசன கவுண்டரில் டிக்கெட் எடுத்துவிட்டு வரிசையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் அவரின் டவுசர் பாக்கெட்டில் இருந்த ரூ.20,000 பணத்தை பிளேடு போட்டு திருடிச் சென்றனர்.

மூலஸ்தானத்தில் அம்மனை தரிசனம் செய்துவிட்டு உண்டியல் காசு போடுவதற்காக பாக்கெட்டில் கைவிட்ட போது பணம் திருட்டுப் போனது தெரிய வந்தது.

கோயில் வளாகத்துக்குள்ளையே பிளேடு போட்டு பணத்தை திருடி சென்றதால் கடும் அதிர்ச்சி அடைந்தார். பிளேடு போட்டதில் அவருடைய வேஷ்டி மற்றும் டவுசர் பாக்கெட் கிழிந்திருந்தது.

இது குறித்து சமயபுரம் கோயில் பணியாளர்களிடம் அவர் முறையிட்டுள்ளார். ஆனால் கோயில் நிர்வாக பணியாளர்கள் அதையெல்லாம் பெரிது படுத்தாமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து பச்சமுத்து சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 342

0

0