நாளை கூடுகிறது அதிமுக செயற்குழு : தேர்தலை எதிர்ப்பது குறித்து முக்கிய ஆலோசனை!!

27 September 2020, 9:40 am
Admk Executive- Updatenews360
Quick Share

சென்னை : தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்ப்பது குறித்து அதிமுக செயற்குழு கூட்டம் நாளை கூடுகிறது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க தமிழக அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. தமிழகத்தை ஆளும் கட்சியான அதிமுக பல்வேறு வியூகங்களுடன் தேர்தலை எதிர்கொள்ள காத்துள்ளன.

இந்நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம நாளை கட்சி தலைமை அலுவலகத்தில நடைபெற உள்ளது. காலை 9.45 மணிக்கு கூடும் இந்த கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், தலைமைக் கழகு நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உட்பட சுமார் 250 பேர் பங்கேற்க உள்ளனர்.

தமிழக சட்டமன் தேர்தலை எவ்வாறு எதிர்ள்கொள்ள வேண்டும், முதலமைச்சர் வேட்பாளர், வழிகாட்டுதல் குழு அமைப்பது தொடர்பாக முக்கிய விவாதம் நடைபெறுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் அனைவரின் கருத்துகள் கேட்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த தீர்மானங்கள் பொதுக்குழு கூடி அதற்கு ஒப்புதல் அளிக்கப்படும். இதனால் செயற்குழு கூட்டத்திற்கு பின் பொதுக்குழு எப்போது கூடும் என்ற தேதியும் பின்னர் அறிவிக்கப்படும்.