10ம் வகுப்பு மாணவனுக்கு காதல் தொல்லை… போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியை கைது : அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
28 December 2021, 11:08 am

Prison, Back, Buttocks, Human Back, Human Hand, Crime

Quick Share

அரியலூர் : அரியலூர் அருகே 10ம் வகுப்பு மாணவனுக்கு காதல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

அண்மை காலமாக தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வரும் சம்பவம் அரங்கேறி வருகிறது. அவர்களின் தொல்லை தாங்க முடியாமல் சில மாணவிகள் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். மேலும், புகாருக்குள்ளாகும் ஆசிரியர்களை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக, கோவை மாணவி தற்கொலைக்குப் பிறகே இந்த சம்பவங்கள் வெளிவரத் தொடங்கின.

இது ஒருபுறம் இருக்கையில், 10ம் வகுப்பு மாணவனுக்கு பள்ளி ஆசிரியை ஒருவர் காதல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியையின் செயலால் அதிர்ந்து போன மாணவன் தனது பெற்றோரிடம் இது பற்றி கூறியுள்ளார். இதையடுத்து, அவர்கள் போலீஸில் அளித்த புகாரின் பேரில், ஆசிரியையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Views: - 300

1

0