பாரத மாதா வேடமணிந்து வேட்புமனு : கவனத்தை ஈர்த்த கோவை பாஜக வேட்பாளர்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 February 2022, 3:48 pm
Bharatha Maatha - Updatenews360
Quick Share

கோவை : வரும் உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவர் பாரத மாதா வேடமணிந்து வேட்பு மனு தாக்கல் செய்த சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பல்வேறு கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கணபதி பகுதி 19வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அமுதாகுமாரி (வயது 40) பாரத மாதா வேடமணிந்து வடக்கு மண்டல அலுவலகத்தில் வேட்புமனு மனு தாக்கல் செய்தார்.

பாரதிய ஜனதா கட்சி பெண்களுக்கு பல்வேறு முன்னுரிமைகளை வழங்கியுள்ளதாலும் பாரத மாதாவை போற்றும் விதமாகவும் இது போன்று வேடமணிந்து வேட்புமனு தாக்கல் செய்ததாக தெரிவித்துள்ளார்.

Views: - 372

0

0