‘நாங்க காசு கொடுத்து வரோம்… நீ ஓசில வர’,… கேள்வி எழுப்பியதால் கல்லூரி மாணவர்கள் ஆத்திரம் ; வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
9 October 2023, 6:09 pm
Quick Share

தஞ்சை புறநகர் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர்களை நான் காசு கொடுத்து வரேனும்,நீ ஒசில வரனு சொன்ன பயணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் வாக்குவாதம் நடந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பள்ளி, கல்லூரி நேரங்களில போதிய அளவு பேருந்து வசதி இல்லாததால், மாணவர்கள் நாள்தோறும் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர். கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என மாணவர்கள் போராட்டங்கள் நடத்தியும் எந்த பயனும் இல்லை.

இந்த நிலையில், மன்னர் சரபோஜி கல்லூரி மாணவ, மாணவிகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்ல ஒரு மணி நேரம் காத்து இருந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் மாணவர்கள் நேர காப்பாளரிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது.

நேரக் காப்பாள்ர் பழைய பேருந்து நிலையம் வழியாக கும்பகோணம் செல்லும் அரசு பேருந்தில் ஏறி செல்லுமாறு கூறியதாக சொல்லப்படுகிறது. பேருந்து மணி மண்டபம் அருகில் சென்றபோது, இது புறநகர் பேருந்து, நகர பேருந்தில் செல்லுமாறு நடத்துனர் மாணவர்களை பேருந்தில் இருந்து இறங்க சொன்னதாக சொல்லப்படுகிறது.

இதனால், நடத்துனருக்கும், மாணவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பயணி ஒருவர் ‘நாங்க காசு கொடுத்து வரோம். நீ ஓசில வரனு,’ சொல்லி இருக்கிறார். தங்களை எப்படி ஓசினு சொல்லி ஒருமையில் பேசலாம் என மாணவர்கள் அந்த பயணிடம் வாக்குவாதம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Thirumavalavan கூட்டணி ஆட்சியில் பங்கு வேண்டும்.. திமுக ஆட்சிக்கு செக் வைக்கும் திருமா? 2 முறை வீடியோவை DELETE செய்ததால் பரபர!
  • Views: - 453

    0

    0