இலவசம்னு சொல்லிட்டு பெண்ணிடம் டிக்கெட் கேட்ட போதை நடத்துநர் : கைக்குழந்தையுடன் கொட்டும் மழையில் இறக்கி விட்ட அவலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 April 2022, 1:51 pm
Conductor Issue -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : அய்யலூர் அரசுப் பேருந்தில் கைக்குழந்தையுடன் பயணம் செய்த பெண்ணை டிக்கெட் எடுக்க கூறி குடிபோதையில் தகாத வார்த்தையில் திட்டி இறக்கிவிட்ட நடத்துனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கலில் இருந்து மாமரத்துபட்டி செல்லும் அரசுப் பேருந்தில் யசோதா தேவி அவரது மகன் தரணிதரன் மற்றும் கைக்குழந்தையுடன் பயணம் செய்துள்ளார்.

அரசுப் பேருந்தின் நடத்துனர் சின்னாளபட்டியைச் சேர்ந்த பால்பாண்டி என்பவர் பயணச்சீட்டு வாங்குமாறு கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பெண்களுக்கு இலவசம் பயணத்தை அறிவித்துள்ளதால் டிக்கெட் இலவசம் தானே என்று கூறியுள்ளார். மேலும் அவரது இரண்டரை வயசு மகன் தரணிதரனுக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்

இலவசம் என்று கூறியும் பயண சீட்டு எடுத்தால் பயணம் செய்யலாம் இல்லை என்றால் பஸ்ஸை விட்டு இறங்குமாறு கூறியுள்ளார்.

அய்யலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மழை வருவதை பொருட்படுத்தாமல் இரண்டரை வயது மகன் மற்றும் கைக்குழந்தையுடன் பயணம் செய்த பெண்ணை அய்யலூர் பேருந்து நிறுத்தம் முன்பு இறக்கி விட்டுள்ளார்.

மேலும் அந்தப் பெண்ணை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வடமதுரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் பால்பாண்டி குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. பெண்களுக்கு பேருந்தில் இலவசம் என்று அறிவித்தும் இவ்வாறு செயல்படும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர்.

Views: - 669

0

0