தேர்தல் தொகுதி பங்கீட்டில் அதிருப்தி : மகிளா காங்கிரஸ் கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் திடீர் தர்ணா : திமுக மீது காங்கிரஸ் அதிருப்தி…?

Author: kavin kumar
30 January 2022, 1:50 pm
Quick Share

திருச்சி : திருச்சி தேர்தல் தொகுதி பங்கீட்டில் அதிருப்தி அடைந்த மகிளா காங்கிரஸ் கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் இன்று காங்கிரஸ் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருச்சி நகர் புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்வது தொடர்பான கூட்டம் நேற்று கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக முதன்மை செயலாளரும் அமைச்சருமான கேஎன் நேரு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 4 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

இதனையடுத்து திருச்சி காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான அருணாச்சல மன்றம் முன்பு மகிளா காங்கிரஸ் கட்சி திருச்சி மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகதீஸ்வரி திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது காங்கிரஸ் கட்சியிக்கு குறைந்தது 16 இடங்களை கட்சி தலைமை பெற வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 460

0

0