காவு வாங்கிய கள்ளச்சாராயம்… திமுக கவுன்சிலரின் கணவர்தான் காரணம் : சிவி சண்முகம் ஆதாரத்துடன் குற்றச்சாட்டு!

Author: Udayachandran RadhaKrishnan
14 May 2023, 5:32 pm
CV Shanmugam - Updatenews360
Quick Share

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள எக்கியார் குப்பத்தைச் சேர்ந்த 3 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் அப்பகுதிக்கு நேரில் சென்று, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, உயிரிழந்த 3 பேர் குடும்பத்திற்கு தலா 25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். அதனை தொடர்ந்து முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறிய பின் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர் விழுப்புரம் மாவட்டத்தில் அபின், கஞ்சா மற்றும் போதை சாக்லெட் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படுவதால் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதனை தடுக்க வேண்டிய காவல்துறை தூங்கிக் கொண்டிருப்பதாகவும் பெருமளவு பணம் கையூட்டு பெற்றுகொண்டு, போதையை காவல்துறை ஊக்குவிப்பதாக குற்றஞ்சாட்டினார்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய ஆட்சியில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் முதல்வராக உள்ளதாகவும் முதல்வரின் குடும்பம் தமிழகத்தை மட்டுமல்ல, காவல்துறையையும் பங்குபோட்டு கொண்டுள்ளதாகவும், போதை மாநிலமாக தமிழகத்தை மாற்றியதுதான் காவல்துறையின் மிகப்பெரிய சாதனையாக உள்ளது என தெரிவித்தார்.
பாக்கெட் சாராயம் விற்பனை குறித்தும், அதன் விநியோகம் குறித்தும் காவல்துறைக்கு நன்றாக தெரியும். ஆனால், வேடிக்கை பார்ப்பதாகவும்
திமுகவைச் சேர்ந்த திண்டிவனம் 20-வது வார்டு பெண் கவுன்சிலரின் கணவர்தான் சாராய விற்பனைக்கு காரணம் என்றும் சில நாட்களுக்கு முன் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் உடனடியாக அவர் விடுவிக்கப்பட்டார்.
அவர், ஏற்கனவே 3 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். மாவட்டத்தில் உள்ள இரண்டு அமைச்சர்களில் எந்த அமைச்சர் அவரது தொழிலுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்பது புரியவில்லை.
உளவுத்துறை செயல்படுகிறதா இல்லையா என்பது தெரியவில்லை என கூறினார். அரசே சாராயத்தை விற்பனை செய்து
மதுவை ஊக்குவிப்பதாகவும் திமுகவினருக்கு சொந்தமாக 8 சாராய ஆலைகள் உள்ளதாகவும் போதையில் தமிழகம் தள்ளாடுகிறது என்றும் கள்ளச்சாராய வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர்களுக்கு துணைபோகும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் அதிமுக சார்பில் விரைவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று அவர் தெரிவித்தார்.

Views: - 296

0

0