ஒசூர் அருகே கண்டெய்னர் லாரி மோதி சரிந்து விழுந்த யானை : இரண்டு கால்கள் செயலிழந்த சோகம்!!

16 January 2021, 9:41 pm
elephant - Updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி : ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற ஒற்றையானை மீது மோதிய கன்டெய்னர் லாரி மோதியதால காயங்களுடன் நிற்க முடியாமல் யானை போராடி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பேரண்டப்பள்ளி என்னுமிடத்தில் சானமாவு வனப்பகுதியை இரண்டாக பிரித்தவாறு பெங்களுரு – சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு கிலோ மீட்டர்கள் தொலைவு வரை வனப்பகுதியில் செல்லும் இந்த தேசிய நெடுஞ்சாலையை கடந்துதான் காட்டுயானை அவ்வபோது இடமாறி வருகிறது. கடந்த சில தினங்களாக பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் ஒற்றைக்காட்டுயானை முகாமிட்டு உணவிற்காக இரவு நேரங்களில் வெளியே வருவது வாடிக்கை.

இன்றும் வழக்கம்போல ஒற்றையானை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது ஒசூரிலிருந்து சென்னையை நோக்கி வந்த கண்டெய்னர் லாரி யானை மீது பலத்த சத்தத்துடன் மோதியது. இதில் கண்டெய்னர் லாரியின் முன்பக்கம் நொறுங்கியதுடன் யானை பலத்த காயங்களுடன் சாலையிலேயே சுருண்டு விழுந்தது.

முதுகு, கால் உள்ளிட்ட பகுதிகளில் காயமடைந்த ஆண் யானை நிற்ப்பதற்கு மேற்க்கொண்ட அனைத்து முயற்சிகளும் பலன்தரவில்லை. யானையை வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் நீர் பாய்ச்சி அடித்தும் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியே தழுவின.

நள்ளிரவு என்பதால் செய்வதறியாமல் அதிகாரிகள் திணறினர். பின்னர் காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் காட்டுயானையை மீட்கும் பணியல் ஈடுபட்டனர்.

5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அதிகாலை 3 மணியளவில் தேன்கனிக்கோட்டை அருகே ஆய்யூர் வனப்பகுதியில் யானையை லாரி மூலம் கொண்டு சென்றனர். யானையின் பின்னங்களால் இரண்டும் செயலிழந்து விட்டதாக கூறப்படுகிறது. பெங்களூருவில் இருந்து வந்த கால்நடை மருத்துவ நிபுணர்கள் யானை எழுந்து நிற்பது கடினம் என தெரிவித்துள்ளனர்.

Views: - 0

0

0