போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய விவகாரம் : மாணவி மற்றும் மாணவியின் தந்தைக்கு ஜாமீன்!!

2 February 2021, 4:41 pm
Neet Fraud - Updatenews360
Quick Share

சென்னை : போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் அளித்ததாக கைது செய்யப்பட்ட மாணவி மற்றும் அவரது தந்தை மருத்துவர் பாலச்சந்திரனுக்கும் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ காலிப்பணியிடங்களை நிரப்ப மருத்துவ கலந்தாய்வு ஆண்டுதோறும நடைபெறும். இந்த முறை நடைபெற்ற கலந்தாய்வில் ராமநாதபுர மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த தீக்சா என்ற மாணவி கொடுத்த சான்றிதழில் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து சான்றிதழை பரிசோதனை செய்த போது அது போலி என்றும் வெறும் 27 மதிப்பெண் வாங்கிய மாணவி 610 மதிப்பெண் வாங்கியதாக போலி சான்றிதழ் தயார் செய்து கொடுத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மாணவி மீது அதிகாரிகள் புகார் அளித்ததை தொடர்ந்து மாணவி மற்றும அவரின் தந்தை பல் மருத்துவரான பாலச்சந்திரன் மீது மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார், இருவரையும் தேடி வந்தனர்.

தலைமறைவான இருவரும் ஐதராபாத்தில் கைது செய்தனர். இதையடுத்து இருவரின் ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு இன்று நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்த நிலையில், இருதரப்பு வாதங்களை கேட்ட நிதிபதி, இருவரும் காவலில் எடுத்து விசாரணை செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் வழங்க உத்தரவிட்டார்.

இதில் மாணவியின் தந்தையான மருத்துவர் பாலச்சந்திரனுக்கு மட்டும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பெரியமேடுகாவல் நிலையத்தில் தினமும் அஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமீன் பிறப்பித்தார்.

Views: - 0

0

0