மெக்சிகோ நாட்டுப் பெண்ணை எரித்து கொன்ற வழக்கு : கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு !!

11 September 2020, 6:08 pm
Mexico Couple Life Sentence - updatenews360
Quick Share

மதுரை : குழந்தையை வளர்ப்பதில் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டில் மெக்சிகோ நாட்டு பெண் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவருக்கு ஆயுள்தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர் மார்ட்டின் மான்ட்ரிக் மன்சூர். இவரது மனைவி செசில்லா அகஸ்டாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மெக்சிகோ நாட்டு நீதிமன்றம் விவகாரத்து வழங்கிய நிலையில் இவர்களது குழந்தை அடில்லாவை இருவரும் தலா 10 நாட்கள் வைத்து பராமரித்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே தனது குழந்தையை அழைத்துக்கொண்டு இந்தியா வந்த கணவர் மார்ட்டின் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தார். இதனைத்தொடர்ந்து மனைவி செசில்லா அகஸ்டாவும் தனது தாயுடன் இந்தியா திரும்பிய நிலையில் கேரளாவில் இருந்துவந்தபோது கடந்த 2012ஆம் ஆண்டு குழந்தையை பார்க்க மனைவி அகஸ்டா கணவனின் வீட்டிற்கு வந்தபோது குழந்தையை வளர்ப்பதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி அகஸ்டா செசில்லாவை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து உடலை மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டியில் எரிந்த நிலையில் கண்மாய் பகுதியில் வீசிவிட்டு தப்பிய கணவர் மார்ட்டினை திருநகர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மார்ட்டின் ஜாமினில் வெளிவந்தார்.

இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று வழக்கின் தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி இளங்கோவன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது மனைவி செசில்லா அக்ஸ்டாவை கொலை செய்ததும் கொலை செய்து தடையத்தை மறைந்ததும் உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்த மார்டினுக்கு ஆயுள் தண்டனையும், சாட்சியங்களை அழித்த பிரிவின் கீழ் 5ஆண்டு சிறைத்தண்டனையும், 5ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து மார்டின் சிறைக்கு அழைத்துசெல்லப்பட்டார்

Views: - 0

0

0