பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சிறுவனும் பாதிப்பு? கூர்நோக்கு இல்லத்தில் திடீர் ஆய்வு… வெளியான உண்மை!!!

Author: Udayachandran RadhaKrishnan
8 April 2023, 8:02 pm
Nellai Teeth - Updatenews360
Quick Share

கூர்நோக்கு இல்லங்களில் சமீப காலமாக நடக்கும் சம்பவங்களை தொடர்ந்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் கூர்நோக்கு இல்லங்களில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் தென் தமிழகத்தில் உள்ள 21 கூர்நோக்கு இல்லங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நெல்லையில் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்திருக்கும் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த், நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையாளர் சீனிவாசன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கூர்நோக்கு இல்லத்தில் இருக்கும் உணவு கூடம் சிறார்கள் தங்கும் அறை சிறார்களுக்கான வகுப்பறை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து அங்கு தங்கியிருக்கும் சிறார்கள் உடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த், நாடு முழுவதும் உள்ள கூர்நோக்கு இல்லங்களில் சமீபகாலமாக உள்ள பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு தென் தமிழகத்தில் கூர்நோக்கு இல்லங்களை ஆணைய உறுப்பினர் என்ற அடிப்படையில் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள கூர்நோக்கு இல்லங்களில் நேரில் சென்று ஆய்வு செய்யாமல் அங்குள்ள அனைத்து வசதிகளையும் ஆய்வு செய்யும் பொருட்டு பிரத்தியேகமாக மொபைல் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மொபைல் செயலியில் நாடு முழுவதும் உள்ள கூர்நோக்கு இல்லங்களின் இருக்கும் உணவுக்கூடங்களின் வசதி அங்கு தங்கி இருக்கும் சிறார்கள் எண்ணிக்கை வருகை பதிவேடு, மாணவர்களின் நலன், சுகாதாரம் உள்ளிட்டவைகள் குறித்த தகவல்கள் இடம் பெறும் வகையில் அந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களும் முறையாக உள்ளதா என்பது தொடர்பாக உண்மை தன்மை குறித்து கண்டறிய தென் தமிழகத்தில் 21 கூர்நோக்கி இல்லங்கள் தேர்வு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் சென்னை கோவை தஞ்சை திருச்சி நெல்லை மாவட்டங்களில் இருக்கும் குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் கூர்நோக்கு இல்லங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் இருக்கும் குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் கூர்நோக்கு இல்லங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகும் குழந்தைகளிடம் புகார்களை பெறுவதற்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தால் இருக்கை ஒன்று உருவாக்கப்பட்டு புகார்கள் நேரடியாக குழந்தைகளிடம் பெறப்பட்டு அதற்கான தீர்வுகள் காணப்பட்டு வருகிறது.

இந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக புதியதாக ஒரு இருக்கை உருவாக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த இருக்கை உருவாகும் பட்சத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் நேரடியாக தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பிரச்சனைகள் தொடர்பாக புகார் அளித்து உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கை கேட்கப்பட்டது.

அறிக்கையில் இதுவரை அந்த விவகாரத்தில் சிறார்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்ற தகவலே கிடைத்தது இந்த விவகாரத்தில் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

அம்பாசமுத்திரம் பல் பிடிக்கப்பட்ட விவகாரத்தில் தனது குழந்தை பாதிக்கப்பட்டிருப்பதாக தாய் ஒருவர் பேட்டி அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக ஆய்வு செய்யப்படும். அந்த தகவலில் உண்மை இருக்கும் பட்சத்தில் தாமாக முன்வந்து தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தும் என தெரிவித்தார்.

Views: - 292

0

0