திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொல்லை கொடுக்கவே ஆளுநர் பதவி : இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது : கி.வீரமணி குற்றச்சாட்டு!!

Author: Babu Lakshmanan
28 February 2023, 1:19 pm
Quick Share

புதுக்கோட்டை ; ஆளுநர் பதவி தேவையில்லை என்றும், ஆளுநர் பதவியை அரசியல் கருவியாக பயன்படுத்தி வருவதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் திராவிட கழகம் சார்பில் திராவிட மாடல் ஆட்சி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திராவிட கழகத்தின் பங்கேற்று பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் கூறியதாவது :- திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் திருப்தியாக உள்ளனர் தமிழ்நாடு அமைதியாக உள்ளது. இந்தியாவில் முதல் முதல்வர் ஸ்டாலின் என்ற பெயரை பெற்றுள்ளார். இரண்டு ஆண்டு கால ஆட்சியில் சாதனைக்கு மேல் சாதனைகளை செய்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். நான் முதல் முதல்வராக இருந்தால் போதாது, தமிழ்நாடு முதலாவது மாநிலமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் முதல்வர் செயல்படுகிறார்.

ஆளுநர் பதவி என்பது ஆட்டுக்குத்தாடி போன்றது. ஆளுநர் பதவியை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி எங்கெல்லாம் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்கிறதோ அங்கெல்லாம் தொல்லை கொடுக்க ஒன்றிய அரசு அரசியல் ஆயுதமாக, அரசியல் கருவியாக பயன்படுத்துகின்ற முறை தவறான முறை. அரசியல் சட்டத்திற்கு எதிரான இந்த முறை தவிர்க்கப்பட வேண்டும். ஆளுநர் பதவி தேவையில்லை, என்று கூறினார்.

Views: - 402

0

0