சாலை விபத்தில் அரசுப் பெண் ஊழியர் பலி : ஓட்டுநரின் தவறால் நேர்ந்த துயரம்!!
15 September 2020, 4:07 pmகரூர் : இரு சக்கர வாகனத்தில் சென்ற அரசு பெண் ஊழியர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழநத் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் டைப்பிஸ்ட் ஆக பணிபுரிந்து வந்தவர் கீதா (வயது 26). பாகநத்தத்தைச் சேர்ந்த இவர் மணல்மேட்டில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து தினமும் கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் இன்று வழக்கம்போல கீதா தனது இரண்டு சக்கர வாகனத்தில் மணல்மேட்டில் இருந்து மதுரை கரூர் தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்த பார்சல் சர்வீஸ் லாரி, இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியது இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கீதா இறந்தார்.
இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்