கொரோனாவை கைது செய்த போலீஸ் : கைதியால் காவல் நிலையத்தில் பீதி.!!

23 May 2020, 12:14 pm
Madurai Poluice Corona - Updatenews360
Quick Share

மதுரை : அடிதடி தகராறில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

மதுரை திடீர் நகர் அருகே உள்ள மேலவாசல் பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மகன் முனீஸ்வரன். நேற்று முன்தினம் திடீர் நகர் பகுதியில் ஏற்பட்ட அடிதடி தகராறில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஏழு நபர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அந்த ஏழு நபர்களில் ஒருவர் முனீஸ்வரன். இன்று வந்த கொரோனா பரிசோதனை முடிவில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள கொரோனா சிகிச்சை மருத்துவமனைக்கு முனீஸ்வரன் கொண்டு செல்லப்பட்டார். மேலும் இவர் கைது செய்யப்பட்டு வைக்கப் பட்டிருந்த திடீர் நகர் காவல் நிலையம் முழுவதும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.