முழுக் கொள்ளளவை எட்டும் பில்லூர் அணை : பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!!

16 May 2021, 7:11 pm
Pillur Dam -Updatenews360
Quick Share

கோவை : பில்லூர் அணை தற்போது 87 அடியை எட்டியுள்ள நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது பில்லூர் அணை. இந்த அணைக்கு கேரளா மற்றும் நீலகிரி மாவட்டத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக இன்று காலை முதல் பில்லூர் அணையிலிருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது.

பில்லூர் அணையின் முழு கொள்ளளவான 100 அடியில் இன்று காலை நிலவரப்படி பில்லூர் அணையில் 82 அடி இருந்து வந்தது. ஆனால் தற்போது பில்லூர் அணை 87 அடியை எட்டியுள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு மற்றும் மின்சார உற்பத்திக்காக பில்லூர் அணையில் இருந்து தற்போது 6 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக தற்போது மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில் ஆற்றின் கரையோர மக்கள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட உள்ளது.

Views: - 108

0

0