தமிழக அமைதிப் பூங்காவாக இருக்க இவர்களே காரணம் : முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு!!

14 January 2021, 2:08 pm
Pongal Police CM - Updatenews360
Quick Share

சென்னை : பரங்கிமலையில் காவல்துறையினர் நடத்திய பொங்கல் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக அமைதிப் பூங்காவாக இருக்க காவல்துறையினரே காரணம் என பாராட்டினார்.

சென்னை பரங்கி மலை ஆயுதப்படை திடலில் நடைபெற்ற காவல்துறையினர் பொங்கல் விழாவில் சென்னை மாநகர காவல்துறையினர் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.

உண்மையில் கிராமத்தில் நடைபெறுவது போல குடிசை அமைக்கப்பட்டு குடில்கள் அமைத்து மாடுகள் கட்டப்பட்டு களைகட்டியிருந்தன. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

பின்னர் அங்கு அமைக்கப்பட்ட மாதிரி சந்தைகளை பார்வையிட்ட அவர், பொங்கல் பானையில் அரிசி வெல்லம் போட்டு பொங்கலை தொடங்கி வைத்த அவர், கயிறு இழுக்கும் போட்டிகளை துவக்கி வைத்தார்.

பின்னர் மாடுகளுக்கு பழங்கை வழங்கிய அவர் காவலர்கள் குடும்பத்துடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல நிச்சயமாக நமக்கு வழி பிறக்க உள்ளது என் கூறினார். மேலும் தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளததற்கு காரணம் காவல்துறையே என பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் மகேஷ்குமார், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Views: - 12

0

0