திருமணமான பெண்ணுடன் உல்லாசம்…ஆபாச வீடியோவால் சிக்கிய காவல் ஆய்வாளர் : காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 October 2021, 4:17 pm
Inpector Changed -Updatenws360
Quick Share

சென்னை : திருமணமான பெண்ணிடம் கள்ளத்தொடர்பில் இருந்தது தொடர்பான ஆபாச வீடியோவால் சிக்கிய காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை வீரா குட்டி தெருவை சேர்ந்தவர் அஷ்ரப் அன்சாரி, இவருக்கும் நெல்வாய் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு முஸ்லீம் முறைப்படி திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சென்னையில் உள்ள அவரது கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக அன்சாரியின் மனைவி திருக்கழுக்குன்றம் அருகே நெல்வாய் பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்று வருவதாக கூறி அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அஷ்ரப் அன்சாரி அவரது மனைவியின் செல்போனை பரிசோதித்த போது அவர் வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அஷ்ரப் அன்சாரி அவரது மனைவியை கண்டித்துள்ளார். மேலும் செல்போனில் மற்றொருபுறம் பேசி வரும் நபர் குறித்தும் விசாரணை நடத்தி வந்தார்.

இந்நிலையில் அஷ்ரப் அன்சாரியின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருந்தது செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முனிசேகர் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து மனைவியின் செல்போனில் இருந்த காவல் ஆய்வாளர் முனிசேகரின் அந்தரங்க புகைப்படங்களை சேகரித்த கணவர் அஷ்ரப், தமிழ்நாடு காவல்துறை தலைவரிடம் புகார் மனு அளித்தார்.

இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் முனிசேகர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு சர்ச்சை ஒன்றும் புதிதல்ல வடமாநிலத்தில் தன்னுடன் வந்த உதவி ஆய்வாளர் ஒருவரை சுட்டுக்கொன்றது, அதன்பிறகு சட்டமன்ற தேர்தலில் ஒரு சாராருக்காக செயல்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிந்ததும் குறிப்பிடத்தக்கது.

Views: - 535

0

0