கரூரில் களைகட்டிய பொங்கல் பண்டிகை : விற்பனை அமோகத்தால் தாறுமாறாக விலை உயர்ந்த வாழைத்தார்கள்..!!

Author: Babu Lakshmanan
13 January 2022, 3:56 pm
Quick Share

கரூர் : கரூரில் பொங்கல் பண்டிகையையொட்டி வாழைத்தார்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

காவிரி மற்றும் அமராவதி ஆறு நதிகள் பாய்வதினால், கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை, லாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம், நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, பேச்சிப்பாறை, திருக்காடுதுறை, கொக்குபாளையம், தவிட்டுப்பாளையம், புஞ்சைபுகழூர், மாயனூர், கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பலர் ஆங்காங்கே பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பச்சை நாடன், கற்பூரவல்லி, ரஸ்தாளி, மொந்தன், பூவன், ஏழரசி உள்ளிட்ட பல்வேறு வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.

இங்கு விளையும் வாழைத்தார்களை உள்ளுர் பகுதிளின் தேவைகளுக்கு மட்டுமல்லாமல், வெளியூர்களுக்கும் விலைக்கு விற்று வரும் வியாபாரிகள், ஒரு சிலர் கரூர் மற்றும் க.பரமத்தி வேலூர் மார்க்கெட்டிற்கும் விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு பின்னர் பெய்த கனமழையினால் வாழைவரத்து உயர்ந்துள்ளதோடு, பண்டிகை சீசன் என்பதினால் வாழைத்தார்கள் விலை கடும் விலை ஏற்றம் கண்டுள்ளது. இலாலாபேட்டை மற்றும் கரூர் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டில், விலை போய் வருகின்றது. ஒரு சீப் விலை ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்ட பூவன் வாழை தற்போது ரூ.30 லிருந்து ரூ.40 வரை விலை போய் வருகின்றது.

இந்நிலையில் வாழைத்தார்கள் சீப் கணக்கினை மதிப்பீடு செய்து, 10 சீப் உள்ள வாழைத்தார், தற்போது பண்டிகை என்பதினால் ரூ. 600க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே போல், தேன்வாழை எனப்படும் கற்பூரவள்ளி ஆனது, ஒரு சீப் ரூ.20 லிருந்து ரூ.40 க்கு விற்பனையாகின்றது. ஒரு தார் ரூ. 400 லிருந்து ரூ.500 வரைக்கும் விற்பனையாகி வருகின்றது.

ரஸ்தாளி வாழைப்பழம் ஒரு சீப் ரூ.50 க்கு விற்பனையானது. ஆனால், தற்போது பண்டிகை என்பதினால் ரூ.60 லிருந்து ரூ. 80க்கும் விற்பனையாகி வருகின்றது. 10 சீப் கொண்ட ஒரு வாழைத்தார்கள், பெரும் பழம் என்றால் ரூ ஆயிரத்திற்கும், சிறிய பழம் என்றால் ரூ. 800 லிருந்து விலை போய் வருகின்றது.

இதே போல், பொங்கல் பண்டிகை என்பதினால் வாழைத்தார்களுக்கு திடீரென்று கிராக்கி ஏற்பட்டதால் வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக வாழைத்தார் விலை கிடுகிடுவென உயர்ந்தது இதனால் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியும், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

Views: - 284

0

0